Tuesday 29 October 2013

ஆறுமுகநேரி காமராஜ் சோமசுந்தரி ஆங்கிலப் பள்ளியில், 26-10-2013 சனிக்கிழமை ,காயல்பட்டினம் வாவு வஜிதா வனிதையர் கல்லூரி மாணவி உடன்குடியைச் சேர்ந்த கணேஷ்வரி என்ற மாணவியின் ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் கண்டு களித்தனர்.இளம் ஓவியக்கலைஞரை வாழ்த்துவோம்.

Wednesday 18 September 2013

இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கம் ஐக்கியஉப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் உத்தமர் காந்திஜி பிறந்த தின விழா- மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி

இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கம் ஐக்கியஉப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் உத்தமர் காந்திஜி பிறந்த தின விழா- மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி
உத்தமர் காந்திஜி பிறந்ததின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி இவ்வாண்டு 02-10-2013 புதன் கிழமை நடைபெற உள்ளது. ஓவியப் போட்டியில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுச் சிறப்பித்திடலாம். போட்டி நடைபெறும் இடம்- ஆறுமுகநேரி , காமராஜ் சோமசுந்தரி ஆங்கிலப் பள்ளி, [காவல்நிலையம் அருகே] 02-10-2013 நேரம் காலை 10 முதல் 12 வரை/வெள்ளை அட்டை வழங்கப்படும்/ உபகரணங்கள் மற்றும் பிற அனைத்தும் பங்கேற்பாளர் பொறுப்பு.ஒருபிரிவிற்கு ஒரு பள்ளியிலிருந்து ஒரு பங்கேற்பாளர் என்ற விகிதத்தில் பங்கேற்பு செய்தல் வேண்டும்        4 –பிரிவுகளில் போட்டி நடைபெறும்
[1] 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை [2] 9ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை [3] 1 ஆம் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை [4] 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை.பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்று - ஒவ்வொரு பிரிவுக்கும் போட்டிக்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாக வழங்கப்படும்.- 1 .மின் சிக்கனம் 2.நீரைச்சேமிப்போம் 3.மரம் வளர்ப்போம் 4.பிளாஸ்டிக்கை ஒழிப்போம் 5.தமிழரின் நாட்டுப்புறக் கலைகள் 6.காந்திஜி 7.மனிதநேயம்
பங்கேற்பாளர் பெயர் பட்டியல் அனுப்ப வேண்டிய முகவரி
முனைவர் த.த.தவசிமுத்து, தலைவர் , தியாகி வாரிசுகள் நலச்சங்கம் மற்றும் காந்திஜி நுகர்வோர் சமிதி 36-காந்தித் தெரு,ஆறுமுகநேரி-628202,தூத்துக்குடி-மாவட்டம். கைபேசி-9176051116 e.mail-www.thavasimuthumaran@gmail.com
 அன்புடன் வரவேற்கின்றோம்..காந்திஜியை நினைப்போம்.அகிம்சையை வளர்ப்போம்